"அ.தி.மு.க. ஒன்றுபட அழைப்பு...வரவேற்கும் ஜெயலலிதா இல்லம்"

x

அ.தி.மு.க.வின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வரவேண்டும் என்று சசிகலா அழைப்பு விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. பல அணிகளாக பிரிந்த பிறகு நடைபெற்ற தேர்தல்களில், தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க.வினருக்கு சசிகலா அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக கட்சி அழிவதை இனியும் தம்மால் வேடிக்கை பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்றும், அனைத்தையும் இழந்து விட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இனியும் தாம் அமைதியாக இருந்தால் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்த துரோகம் ஆகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். கட்சி நலன் கருதி அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வர வேண்டும் என்றும், அனைவரையும் ஜெயலலிதா இல்லம் வரவேற்கிறது என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்