கொட்டும் மழையில் ஆவேசமான உரை.. "இங்க வீடு கட்ட பட்டா கொடுத்தது யார்?" - கதை கிழித்த விசில் சத்தம்

x

சமத்துவத்தை விரும்பிய பெருந்தலைவரை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம் என்றும், அவரை போல் வரமுடியாவிட்டாலும், அவரை போல் உருவாக முயற்சி செய்து வருகிறோம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற அக்கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தில், கொட்டும் மழையில் உரையாற்றினார். அப்போது,, கடந்த 56 ஆண்டுகளாக ஆண்ட திராவிட கட்சிகள் சென்னையில் நீர்த்தடங்களை சிறப்பாக செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.இலவசங்கள் வழங்குவதை தவிர்த்து அடிப்படை பிரச்சினைகள் குறித்து பணியாற்றி இருந்தால் இந்த நிலைக்கு சென்னை தள்ளப்பட்டிருக்காது என்று கூறினார். மழை நேரத்தில் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், தேர்தல் நேரத்தில் மாறிவிடுவதாக விமர்சித்தார். சமத்துவத்தை விரும்பிய பெருந்தலைவரை போல் உருவாக முயற்சி செய்து வருகிறோம் என்று சரத்குமார் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்