"யாராக இருந்தாலும்.." - ஆவேசமாக பேசிய அமைச்சர் துரை முருகன்
சேலம் மாவட்டம், ஓமலூரில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து, திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வாக்கு சேகரித்து பேசினார். அப்போது, நடைபெற இருக்கும் தேர்தல், ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல் என்றும், ஜனநாயகத்துக்கு எதிரான முயற்சிகளை தடுப்பதற்காக இந்த தேர்தலை சந்திக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
ஜனநாயகத்தை அழிக்க நினைப்பவர்கள், நண்பர்களாக இருந்தாலும் எதிரிகளாக இருந்தாலும் திமுக எதிர்க்கும் என்றும் அவர் கூறினார்.
Next Story