மகளிருக்கு மாதம் ரூ.1000..."வீட்டிற்க்கு வரும் முக்கிய கடிதம்" - இல்லத்தரசிகளே கவனமா இருங்க..!

omen
x

மகளிர் உரிமைத் தொகை பெறும் அனைவருக்கும் "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை" என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்துடன் கூடிய கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது.. அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசுவது போன்ற ஆடியோ தற்போது பொது மக்களின் செல்போன் எண்ணுக்கு வருகிறது. இதனால் பயனாளிகள் முதல்வர் தங்களுடன் பேசியதாக புளங்காகிதம் அடைந்து வருகின்றனர்.. Rs.1000 per month for daughter..."Important letter coming home" - Housewives beware..!கடிதத்தில் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பெண்களுக்கான திட்டங்கள் பலவற்றை தங்கள் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருவதாகவும், கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்கு தரப்படும் அங்கீகாரமே இத்தொகை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது உதவித்தொகை அல்ல.. உரிமைத் தொகை என்றும், உங்களில் ஒருவரான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை எனவும் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளதாய் குறிப்பிடப்பட்டுள்ளது.. ஆனால், அக்கடிதத்தின் கவரில் இந்தக் கடிதத்தை முகவரி தாரரிடம் ஒப்படைக்க இயலாவிட்டால் பெறுநர் முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் குறித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து தமிழக அரசு குறிப்பிட்டுள்ள தகுதி இல்லை என்றால் உடனடியாக மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் என்ற தகவல் ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடிதம் திருப்பி அனுப்பப்பட்டால் உரிமைத் தொகை கிடைக்காதோ என்ற அச்சத்தில் முதல்வரின் கடிதத்தைப் பெறுவதில் பெண்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்