ரவுடி கருக்கா வினோத் "என்.ஐ.ஏ. அல்லது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

x

இவ்வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத், கடந்த ஆண்டு சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல் துறையே தெரிவித்துள்ளதை வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சூழலில், கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்தால், தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை அல்லது சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்