"திராவிட தேசத்தில் தான் பக்தி தோன்றியது" - ஆளுநர் ஆர்.என். ரவி

x

ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாதரின் 150-வது பிறந்தநாளையொட்டி சென்னை, கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், திராவிட தேசம் என அழைக்கப்படும் தென்பகுதியில் தான் பக்தி தோன்றியது எனவும், ராமானுஜ சாரியார்தான் தென் பகுதியிலிருந்து வடக்கு பகுதியில் பக்தியை பரப்பினார் என்றும் தெரிவித்தார். மேலும், இந்து தர்மத்தை பாதுகாக்க தான் அனைத்து மஹான்களும் தோன்றியதாக கூறிய அவர், பாரதம் என்பதே இந்து சனாதன தர்மத்தின் செயல் உருவம் தான் எனவும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் போது இந்து தர்மத்தை பாதுகாக்க வள்ளலார், அய்யா வைகுண்டர் போன்றோர் இயக்கங்களை தோற்றுவித்து செயல்பட்டார்கள் எனத் தெரிவித்துள்ள அவர், அவர்களின் இலக்கு இன்னும் முழுமையடையாமல் இருப்பதாக விமர்சித்துள்ளார். எனினும், கடந்த 10 ஆண்டுகளில் இந்து தர்மம் வலுவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்