தமிழகத்திற்கு புதிய ஆளுநர்..? - ஆளுநர் RN ரவியின் டெல்லி பயணத்தின் பின்னணி

x

IPS அதிகாரியாக பணியாற்றி ஓய்வுப்பெற்ற ரவீந்திர நாராயண ரவி எனப்படும் ஆர்.என். ரவி, நாகாலாந்து ஆளுநராக இருந்தபோது, 2021 செப்டம்பரில் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் தமிழக அரசோடு சுமூகமான உறவை கொண்டிருந்த ஆளுநர் ரவி, நீட் மசோதாவை கிடப்பில் போட இருதரப்பு மோதல் தொடங்கியது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், 2023 ஜனவரியில் தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்பதே சிறப்பாக இருக்கும் என அவர் சொன்னது, சட்டப்பேரவையில் அரசு உரையை மாற்றி படித்தது, முதல்வரை விட தனக்கே அதிகாரம் என அமைச்சரை நீக்கியது எல்லாம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது அவரது பதவிக்காலம் இம்மாதத்தோடு நிறைவடைகிறது. இப்போது அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? அல்லது மத்தியில் பெரிய பொறுப்பை கொடுக்கலாமா? பாஜகவை சேர்ந்த மற்றொரு நபரை ஆளுநராக கொண்டு வரலாமா என்பது குறித்து மத்திய அரசு தரப்பு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ஆர்.என்.ரவி டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்