அடுத்தடுத்து செக்... `I.N.D.I.A'.வில் `NDA'வை கழட்டிய பாஜக வடக்கில் தலைகீழான கூட்டணி காங்.,க்கு ட்விஸ்ட் கொடுத்த ஆர்.எல்.டி
உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள ஜெயந்த் செளத்ரியின் ராஷ்டிரிய லோக் தள் கட்சி, அக்கூட்டணியில் இருந்து வெளியேறி, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆர்.எல்.டி. கட்சிக்கு இரண்டு மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை பதவி வழங்க தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளதன் மூலம், ஆர்.எல்.டி மற்றும் பாஜக கூட்டணி அமைவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. ஆர்.எல்.டி. கட்சியை தொடங்கிய அஜித்சிங்கின் தந்தை தான் முன்னாள் பிரதமர் சரண் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் அஜித் சிங் பிறந்தநாளில், பா.ஜ.க-ஆர்.எல்.டி கூட்டணி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.