அலறவிட்ட அதிமுக சீனியர்கள்.. வாயே திறக்க முடியாமல் ஆடிப்போய் நின்ற ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பதவியா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எழுமலை பகுதியில் நடைபெற்ற உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில், திமுகவில் இருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்குவதா என்றும், அவர்களிடம் இருந்து உறுப்பினர்கள் அட்டைகள் பெறுவதா என்றும் கேள்வி எழுப்பி, மூத்த நிர்வகிகள் வாக்குவாதம் செய்தனர். அவர்களை சமாதானப்படுத்திய ஆர்.பி.உதயகுமார். அவரை ஒவ்வொரு வார்டு நிர்வாகிகளையும் அழைத்து உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
Next Story