CM, PM-க்கு ஒரே நேரத்தில் தேர்தல்.. சத்தமே இல்லாமல் ஒரு மெகா பிளான்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த டீம்
CM, PM-க்கு ஒரே நேரத்தில் தேர்தல்
சத்தமே இல்லாமல் ஒரு மெகா பிளான்
நேற்றே ஸ்கெட்ச்போட்டு கொடுத்த டீம்
ரெடியான 18,626 பக்க அறிக்கை
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே என ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த ஒரு தொகுப்பு...
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு ஆய்வு நடத்தி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம், 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அளித்துள்ளது. அதில், முன்கூட்டியே திட்டமிட்டால், சட்டப்பேரவைத் தேர்தலை மக்களவைத் தேர்தலுடன் நடத்த வழி உள்ளதாகவும், அதற்கேற்ப சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தலை முதல் சுற்றிலும், 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை 2வது சுற்றிலும் நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரே வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.