ராமதாஸ் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு - அதிர்ச்சி காட்சிகள்

x

பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பாமகவின் பாட்டாளி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாட்டாளி ஆட்டோ ஓட்டுநர் சங்கத்திற்கும், கம்யூனிஸ்ட் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்டோ சங்கத்தின் இடத்தில் அத்துமீறி, பாட்டாளி ஆட்டோ ஓட்டுனர் சங்க பெயர் பலகை வைக்கப்பட்டிருப்பதாக கூறி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்