"தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - ராமதாஸ்
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில்
வன்னியர்கள் 10.5 சதவீதத்திற்கும் அதிக பிரதிநிதித்துவம்
பெற்றிருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளதை டாக்டர்
ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட
சில புள்ளி விவரங்களை மட்டும் அரைகுறையாகவும்,
திரித்தும் வெளியிட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
1989 முதல் இடஒதுக்கீடு மூலம் அரசு பணி மற்றும் உயர்
கல்வியில் சேர்ந்தவர்களின் சாதி வாரியான தரவுகளை
கொண்ட வெள்ளை அறிக்கையை தமிழக அரசு
வெளியட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Next Story