தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி | Tn Govt | ramadoss

x

பணியாளர்கள் 32 ஆயிரத்து 500 பேருக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில், மாற்று ஏற்பாடு செய்யும் கடமை மாநில அரசுக்கு இல்லையா? என, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் நிதி வழங்குவதற்கு மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் தெரிவித்துள்ளார். மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் நிதியை வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசும் அந்த நிதிக்காக காத்திருக்காமல், சொந்த நிதியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்