ராமதாஸ் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்.. வாளியில் அள்ளி சென்ற பணியாளர்கள்
திண்டிவனத்தில் பெய்த கனமழையால், பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. திண்டிவனம் நகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், பல இடங்களில் மழைநீர் தேங்கியது. காமாட்சியம்மன் தெருவில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்குள் மழைநீர் பகுந்ததால் பல்வேறு பொருட்கள் சேதமடைந்தன. வீட்டில் இருந்த தண்ணீரை அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் வாளிகள் மூலம் வெளியேற்றினர். பாதாள சாக்கடை திட்டத்தை சரியாக மேற்கொள்ளாததாலும், குப்பைகளை அகற்றுதல், கால்வாய் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யாததாலும், ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே பல இடங்களில் மழைநீர் தேங்கியதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story