``SC/ST... பணியிடங்கள்..ஆண்டுகளாக..'' - ராமதாஸ் கடும் கண்டனம் | Ramadoss

x

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியலினத்தவருக்கு 8 ஆயிரத்து 100, பழங்குடியினருக்கு 2 ஆயிரத்து 302 பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாமலிருப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவை சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்திருந்ததாகவும் ஆனால், மூன்றாண்டுகள் ஆகப்போகும் நிலையில், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், பட்டியலினத்தவருக்கான சமூக நீதியை மூன்றாண்டுகளாக முடக்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்