விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கோரிக்கை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம் தணிந்த பிறகே நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மே 4-ஆம் தேதி முதல், கத்திரி வெயில் தொடங்குவதால் 116 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சூழலில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தலைவலி, வாந்தி, மயக்கம் மற்றும் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தினால் போதுமானது என்றும், எனவேர இடைத்தேர்தல் தேதியை தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்து பேசி தேர்தல் ஆணையம் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜூன் 1-ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால், அந்த முடிவை கைவிட வேண்டும் என்றும், வெப்பம் தணிந்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.