ரஜினி எப்படி இருக்கிறார்? - பிரதமர் மோடி போட்ட போன் - லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல்..

x

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மனைவியிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்.

இதனை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பதிவில், ரஜினியின் உடல்நலம் குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார் என்று தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக பிரதமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டது என்றும், ரஜினி விரைந்து குணமடைய பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்