``ரூ. 56,993 கோடி.." ரயில் பயணிகளுக்கு மானியம்... எழுத்துபூர்வமாக சொன்ன ரயில்வே அமைச்சர்

x

கொரோனா காலத்தில் திரும்பப் பெறப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகை மீண்டும் வழங்கப்படுமா? என மக்களவையில் திரிணாமுல் எம்.பி. தீபக் தேவ் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அனைத்து தரப்புக்கும் ரயில்வே குறைந்த விலையில் சேவைகளை வழங்க முயற்சி செய்கிறது, 2022-23 ம் நிதியாண்டில் ரயில் பயணிகளின் டிக்கெட்களுக்கு 56 ஆயிரத்து 993 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளார். இது சராசரியாக ரயில்வேயில் பயணம் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் 46% சலுகையாகும், இந்த மானியம் அனைத்து பயணிகளுக்கும் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார். இதுதவிர நான்கு வகையான மாற்றுத்திறனாளி பிரிவினர், நோயாளிகளில் 11 வகையான பிரிவினர் மற்றும் மாணவர்களை எட்டு வகையான பிரிவினருக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்