ராகுலுக்கு அடுத்த சிக்கல்... கோர்ட் படியேறிய சுப்ரமணிய சாமி... தகிக்கும் டெல்லி அரசியல்

x

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக சுப்ரமணிய சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

2003-ல் பிரிட்டன் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த ராகுல், வருமான கணக்கு தாக்கல் செய்த 2005, 2006 ஆகிய ஆண்டுகளில் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என தெரிவித்திருக்கிறார் என சுப்ரமணிய சாமி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசமைப்புச் சட்ட 9-ஆவது பிரிவை மீறுவதாகும் என குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய கோரி தான் அளித்த கோரிக்கை தொடர்பாக 14 நாள்களுக்குள் பதில் அளிக்குமாறு 2019 ஏப்ரலில் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியதாகவும், இதில் 5 ஆண்டுகளாக என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக தான் எழுதிய கடிதம் தொடர்பாக முடிவெடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்