"இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதே மோடியும் பா.ஜ.கவும் தான்" - ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் மொத்த மூலதனமும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மூன்று பில்லியனர்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மோடியும், பா.ஜ.கவும் இணைந்து இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததாகவும், ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பொதுத்துறையில் வேலைவாய்ப்பை பெற்று வந்த நிலையில், ஒன்றன் பின் ஒன்றாக தனியார் மயமாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புக்காக 24 மணிநேரமும் உழைத்து பெற்றுத் தருவோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
Next Story