சீரியஸ் பேச்சுக்கு நடுவே ராகுல் விட்ட வார்த்தை.. அதை நினைத்து நினைத்து கொதித்த பாஜக

x

7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளதாக குற்றம்சாட்டிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பணம் இருந்தால் தான் மருத்துவ கல்வி கிடைக்கும் என்கிற நிலை உருவாகி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில், நாட்டில் நிகழ்ந்த பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து, ராகுல்காந்தி மற்றும் ஆளுங்கட்சியினர் இடையே இன்று தீவிரமான விவாதம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளதாக குற்றம்சாட்டிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பணம் இருந்தால் தான் மருத்துவ கல்வி கிடைக்கும் என்கிற நிலை உருவாகி இருப்பதாக கவலை தெரிவித்தார்.

(நீட் தேர்வு பணக்கார குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்டது. அது தொழில் முறை தேர்வு அல்ல, வணிக ரீதியிலான தேர்வு. நீட் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் ஈட்டப்படுகின்றன. இந்த விவகாரம் குறித்து ஒருநாள் விவாதம் நடத்த வேண்டும்)

எதிர்க்கட்சி தலைவர் விவாதத்தின் போது முன்வைத்த பல கருத்துகள் உண்மையானவை அல்ல எனக்குறிய மத்திய உள்துறை அமித்ஷா, குற்றச்சாட்டுகளை அவர் நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனிடையே, சிவபெருமானுடன் நேரடி தொடர்பில் இருப்பவர் பிரதமர் மோடி என விமர்சித்த ராகுல்காந்தி, மற்ற உயிரினங்களை போல நாம் பிறப்போம், இறப்போம், ஆனால், பிரதமர் பயாலஜிக்கலாக பிறக்காதவர் என குறிப்பிட்டார்.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, பெரும்பான்மை என்ற பெயரில் இந்த அரசு இந்துக்கள் அல்லாதவர்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் ஆகியோரை குறி வைப்பதாகவும், இதுதான் பாசிசம் எனவும் குற்றம்சாட்டினார்.

(நீங்கள் தமிழ்நாட்டை மதிக்கவில்லை, நீட் விலக்கு தொடர்பாக 8 கோடி மக்களின் குரல்களை நீங்கள் நிராகரித்தீர்கள். எங்களை குப்பை தொட்டி போல நடத்தினீர்கள். அதனால்தான் நாங்கள் 40க்கு 40 என வென்று உங்களுக்கு பாடம் புகட்டி உள்ளோம்)

மறுபுறம், சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசிய தி.மு.க.வினர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என, மக்களவையில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் தெரிவித்த கருத்துக்கு, திமுக எம்.பி., தயாதிநிதி மாறன் ஆட்சேபம் தெரிவித்தார்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் பலியான சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று பதில் அளிக்க வேண்டும் எனவும் அனுராக் தாக்கூர் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்