நாடாளுமன்றத்தில் ராகுல் பேசும் போது மைக்கை ஆஃப் செய்தது யார்?
மக்களவை இன்று காலை தொடங்கியதும் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, சபாநாயகர் மைக்கை அணைத்து விடுவதாக நாடாளுமன்றத்திற்கு வெளியே சில எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள சபாநாயகர்களிடம், ஒலி பெருக்கிகளின் கட்டுப்பாடு இல்லை என விளக்கம் அளித்தார். கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் நீட் விவகாரம் தொடர்பாக பேசும்போது, சபாநாயகர் அவர்களின் மைக்கை அணைத்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story