கடைசி நேரத்தில் இறங்கி அடித்த ராகுல், ஜெகன்.. பரபரப்புக்கு பஞ்சமில்லாத தரமான 4ம் கட்டம்
மக்களவைக்கான 4ஆம் கட்ட தேர்தல் மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் காஷ்மீர் என 10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு வரும் 13ம் தேதி 4ம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன் ஆந்திர மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது. பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்த நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டையில் ஈடுபட்டனர். ஆந்திராவில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரம் முடிவுற்ற நிலையில், வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெறாமல் இருக்க, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.