ராகுல் காந்தி மீது சமூக ஆர்வலரின் மனு.. முடித்து வைத்த டெல்லி உயர்நீதிமன்றம்

x

டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, எரிக்கப்பட்ட சிறுமியின் படத்தை பதிவிட்டதற்காக, ராகுல் காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

டெல்லி கன்டோன்மென்ட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு, 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டார். அந்த சிறுமியின் படத்தை ட்விட்டரில் பதிவிட்டதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக மகரந்த் சுரேஷ் மத்லேகர் என்ற சமூக ஆர்வலர், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டதாக அவருடைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ராகுல் காந்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ராகுல் காந்திக்கு எதிராக தாக்கல் செய்த பொது நல மனுவை முடித்து வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்