ராகுல் காந்திக்கு எதிரான மனு.. கேஸ் போட்டவருக்கு அதிரடி அபராதம் | Rahul Gnaadhi | Congress

x

ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கியதை எதிர்த்து மனுதாக்கல் செய்த நபருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்தி விட்டது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து, அவர் தொடர்ந்து எம்.பியாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அசோக் பாண்டே என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. இந்த அபராத உத்தரவை திரும்பப் பெறக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், பயனற்ற வழக்குகளை தாக்கல் செய்வதற்கு முன் 100 முறை யோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்