எதிர்க்கட்சி செய்த அமளி.. "பேசும் போதே அணைக்கப்பட்ட மைக்.." அவையை அதிரவைத்த எதிர்க்கட்சி | Thanthitv

x

மக்களவையில் பேசிய ராகுல் காந்தி நீட் குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சபாநாயகர் மறுப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை முடங்கியது. இதற்கிடையே அவையில் ராகுல் காந்தி பேசிய போது ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் மோடி நீட் தேர்வு குறித்து பேசாமல் இருக்கும் போது, ராகுல் காந்தி குரலை எழுப்பினார் என கூறியிருக்கும் காங்கிரஸ், இவ்வளவு தீவிரமான பிரச்சினையில் மைக்கை அணைப்பது போன்ற மலிவான செயல்களை செய்து இளைஞர்களின் குரலை நசுக்க சதி நடக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்