பாஜக புள்ளி ராகுலின் ஆண்மை குறித்து பேசியதால் வெடிக்கும் களம்

x

ராகுல் காந்தி ஆண்மையற்றவர் என பாஜகவை சேர்ந்தவர் தெரிவித்த கருத்துக்கு குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ புபாத் பயானி அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த திங்களன்று குஜராத் மாநிலம் ஜனாக்கத் பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜகவை சேர்ந்த புபாத் பயானி, ராகுல் காந்தியை போன்ற ஒரு ஆண்மையற்றவரிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது என பேசியிருந்தார்.

பயானியின் இந்த பேச்சை மேற்கோள் காட்டி பேசிய குஜராத் மாநில காங்கிரஸ் தலைவரான பிரதாப் துதாத், ராகுல் காந்தி ஆண்மை குறித்து பேச பாஜகவுக்கு தகுதியில்லை என்றும், அவர்களுக்கு சந்தேகம் இருந்தால், ராகுல்காந்தி தனது ஆண்மையை நிரூபிக்க தயார் என்றும் பதிலடி கொடுத்தார். அதற்கு குஜராத் மாநில பாஜகவினர் பலரும் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்