ராகுல்காந்தி நின்ற இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய பா.ஜ.கவினர்
ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, பிரதமர் மோடி தொகுதியான வாரணாசிக்கு சென்றடைந்தது. கோடௌலியாவில் உள்ள நந்தீஸ்வர் சந்திப்பில் ராகுல் காந்தி பொதுமக்களிடம் உரையாற்றினார். நிகழ்ச்சி முடித்து விட்டு ராகுல்காந்தி சென்ற நிலையில், 51 லிட்டர் கங்கை நீருடன் வந்த பாஜகவினர் நந்தீஸ்வர் சந்திப்பை சுத்தப்படுத்தினர்.
இதையடுத்து, ராகுல் காந்தி இறைச்சி உண்பதாக குற்றம் சாட்டி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வராத ராகுல்காந்தி, தற்போது தேர்தல் வந்துள்ளதால் வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
Next Story