எம்.பி. ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு
அசாம் மாநிலத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று கவுஹாத்தி நகருக்குள் நுழைய போலீசார் அனுமதி மறுத்ததால், போலீஸாருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் அமைத்த தடுப்புகளை காங்கிரஸார் அகற்றினர். அதுகுறித்த வீடியோக்கள் வெளியாகின. ராகுல் காந்தி மக்களை தூண்டிவிடுவதாக, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியிருந்தார். வீடியோ ஆதாரத்தைக் கொண்டு வழக்குப்பதிய போலீஸாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், வன்முறையை தூண்டுதல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளிலும், காவல்துறையினர் மீது காங்கிரஸார் தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிட்டு, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், கன்ஹையா குமார் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story