முன்னாள் முதல்வர் வீட்டிற்கு பைக்கில் சென்ற ராகுல்.. "சேர்ந்த அடுத்த நொடி" வெளியானபகீர் பதிவு
மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்தார்.
மிசோரம் சட்டமன்றத் தேர்தல், நவம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், 3 நாள் பயணமாக மிசோரம் சென்றுள்ள ராகுல் காந்தி, அம்மாநில முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லாவின் இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றார். செல்லும் வழியில் பொதுமக்களை சந்தித்தார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், மிசோரமில் உள்ள ஐஸ்வால் தெருக்களில், போக்குவரத்து ஒழுங்குமுறையின் பார்வை கிடைத்ததாக குறிப்பிட்டார். இதனிடையே, மிசோராமில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸும், நமது நாட்டைப் பற்றி நம்மை விட வித்தியாசமான பார்வையைக் கொண்டிருப்பதாகவும், இந்தியாவில் அனைத்து மதங்கள், கலாச்சாரங்கள், வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். நாட்டின் அடித்தளத்தை அமைக்க காங்கிரஸ் உதவியதாகவும், நாட்டின் ஒட்டுமொத்த நிறுவன கட்டமைப்பையும் கைப்பற்ற பா.ஜ.க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.