வெளியான ராகுல் காந்தியின் சொத்து பட்டியல் | Congress | rahul gandhi

x

#rahulgandhi | #Congress

வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி, தனக்கு 20 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.அதன்படி, 20 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாகவும், அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு 9 கோடியே 24 லட்ச ரூபாய் எனவும், அசையா சொத்துகளின் மதிப்பு 11 கோடியே 15 லட்ச ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு சொந்த வாகனம் கிடையாது எனவும், அடுக்குமாடி குடியிருப்பு இல்லை எனவும் ராகுல் காந்தி பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.ரொக்கமாக 55 ஆயிரம் ரூபாய் உள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல், வங்கியில் 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக தெரிவித்துள்ளார்.4 கோடியே 33 லட்ச ரூபாய் மதிப்பில் பத்திரங்கள் மற்றும் பங்குகள் உள்ளதாகவும், 3 கோடியே 81 லட்ச ரூபாய் மதிப்பில் மியூட்சுவல் நிதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கோல்டு பத்திரம் வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள ராகுல், 4லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அளவில் நகைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் உள்ளதாகவும், தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் உள்ளதாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தகுதி நீக்க வழக்கு உள்பட ராகுல் மீது 18 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்