யாத்திரையை ஒத்திவைத்துவிட்டு வயநாடு விரைந்த ராகுல் - காரணம் இதுதான்..

x

கேரள மாநிலம் வயநாட்டில் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் காரணமாக தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடையும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, தனது யாத்திரையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வயநாட்டிற்கு அவசரமாக விரைந்துள்ளார். வயநாட்டில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த வனத்துறை அதிகாரி வி.பி. பால் இல்லத்திற்கும், புலியால் தாக்கி உயிரிழந்த பிரஜீஷ் என்பவரது இல்லத்திற்கும், ராகுல் காந்தி நேரில் சென்று குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து கலந்துரையாடினார். சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே, 36வது நாள் யாத்​திரையை ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று பிற்பகல் மேற்கொள்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்