புதின் முகத்திற்கு நேராகவே ஓபனாக அடித்த பிரதமர் மோடி .."இனி எல்லாமே மோடி கையில தான்"

x

உக்ரைன் போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது. 3 ஆவது முறை பிரதமராக பதவியேற்றதும் மோடி முதல் வெளிநாட்டு பயணமாக ரஷ்யா சென்றதை மேற்கத்திய நாடுகள் உன்னிப்பாக கவனித்தன. உக்ரைன் போரில் ரஷ்யாவை மேற்கத்திய நாடுகள் எதிர்க்கும் வேளையில், மாஸ்கோவில் புதினை சந்தித்த பிரதமர் மோடி அவரிடம் நேரடியாகவே உக்ரைன் உடனான பிரச்சினைக்கு தீர்வு பேச்சுவார்த்தையில் உள்ளதே தவிர, போர்க்களத்தில் இல்லை என அறிவுறுத்தியிருந்தார். மோடி - புதின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜீன்-பியர் பேசுகையில், அமைதியை மேம்படுத்துவதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என வலியுறுத்தினார். ரஷ்யா உடன் இந்தியா நீண்ட காலமாக கொண்டிருக்கும் ஆழமான நட்பு, கொடூரமான போரை முடிவுக்கு கொண்டுவர புதினை வலியுறுத்தும் திறனை கொண்டிருக்கிறது என்றார். போரை தொடங்கிய புதினாலே போரை முடிவுக்கும் கொண்டுவர முடியும் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது. 2020 பாலி ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில், இது போரின் சகாப்தம் அல்ல என்று புதினிடம் பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டிய, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்கரெட் மேக்லியோட், உக்ரைனிலிருந்து ரஷ்யா வெளியேற வேண்டும், இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்...


Next Story

மேலும் செய்திகள்