ரூ.13,500 கோடியில் திட்டங்கள் - மொத்தமாக மாறப்போகும் மாநிலம்

x

மஞ்சளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வகையில், தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில், சாலை, ரயில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உயர் கல்வி போன்ற முக்கிய துறைகளில் 13 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய பிரதமர், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு மஞ்சள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருப்பதாக குறிப்பிட்டார். முலுகு என்ற இடத்தில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்