BRS, BJP-யை விமர்சித்த பிரியங்கா காந்தி | Priyanka Gandhi | BJP | Telangana election
தெலங்கானாவில் ஆளும் கட்சியான பிஆர்எஸ்ஸும், பாஜகவும், ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஒரே கொள்கையில் இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். யதாத்ரி புவனகிரியில் உள்ள போங்கிர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, அவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். பிஆர்எஸ் மற்றும் பாஜகவும், தேர்தல் நேரத்தில் வாக்கு அறுவடைக்காக பணிகளை செய்வதாக தெரிவித்த பிரியங்கா காந்தி, தெலங்கானா மக்கள் விலை போகமாட்டார்கள் என்றார். தெலங்கானா மக்கள் உரிமைக்காக முன்பும் போராடியதாகவும், இப்போதும் போராடுவதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்
Next Story