ஜனாதிபதியின் அழைப்பு... RN ரவிக்கு டிக்-ஆ..? செக்-ஆ..? டெல்லி சொல்ல போகும் சேதி
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் 2 நாள்கள் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்...
டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி, கலந்து கொள்கிறார்.
2 நாள்கள் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி ஆயோக் துணைத்தலைவர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில் 3 குற்றவியல் சட்டங்களை செயல்படுத்துவது, உயர் கல்வியில் சீர்திருத்தங்கள், பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம்,
பழங்குடியினர் பகுதிகள், இயற்கை விவசாயங்களை ஊக்குவிப்பதில் ஆளுநர்களின் பங்கு,
மாநிலங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துதல் மற்றும் ஆர்வமுள்ள மாவட்டங்கள், தொகுதிகள், எல்லைகள் போன்ற கவனம் செலுத்தும் பகுதிகளின் வளர்ச்சி உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஆளுநர் தனது டெல்லி பயணத்தின் போது முக்கிய அமைச்சர்களையும் சந்திப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.