விஜயகாந்துக்கான விருதை பெற்றவுடன் மேடையில் பிரேமலதா பரபரப்பு பேச்சு

x

ஊழல்வாதிகளிடம் நாடு சிக்கி விட்டதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

S.D.P.I. கட்சி சார்பில், தமிழ் சுடர் விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது. இதில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த காயிதே மில்லத் விருதை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு S.D.P.I. தலைவர் நெல்லை முபாரக் வழங்கினார். இதே போன்று, காமராஜர் விருது முன்னாள் அமைச்சர் விசுவநாதனுக்கும், அம்பேத்கர் விருது மாரி செல்வராஜுக்கும் என 9 பேருக்கு தமிழ் சுடர் விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், காயிதே மில்லத் பெயரில் விருது வழங்குவது சிறப்பு என்றார். நாடு கொள்ளையர் வசம் சென்றுவிட்டதாக வேதனை தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், காயிதே மில்லத், காமராஜர் போன்று நல்ல தலைவரை மக்கள் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்