பிரேமலதாவுக்கு போன் செய்த ஈபிஎஸ்..இன்று வெளியாகும் முக்கிய தகவல்
அதிமுக - தேமுதிக இடையே இன்று கூட்டணி உடன்பாடு எட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக - தேமுதிக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய நான்கு தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் தேமுதிக கேட்டதாகவும், அதிமுக தரப்பில் கள்ளக்குறிச்சி, விருதுநகர், கிருஷ்ணகிரி, வடசென்னை ஆகிய தொகுதிகளை ஒதுக்க உறுதியளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. மாநிலங்களவைப் பதவி குறித்து தேர்தல் முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் என அதிமுக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. தொலைபேசி உரையாடலில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், இன்று நடைபெறும் 3வது கட்ட பேச்சுவார்த்தையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.