பொன்முடி துறை மாறுதலுக்கு இதுதான் காரணமா?

x

ஆளுநருடனான மோதல் போக்கை கைவிட்டு, இணக்கமாக செயல்பட தமிழக அரசு விரும்பியதன் காரணமாகவே, அமைச்சர் பொன்முடியின் இலாகா மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சரான பொன்முடி, இரண்டாம் முறையாக உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். எனினும், ஆளுநர் ரவியுடன் அவர் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததாக கூறப்படுகிறது. உயர் கல்வித்துறையின் செயல்பாடு குறித்து ஆளுநர் விமர்சனம் செய்வதும், அதற்கு பொன்முடி உடனுக்குடன் பதிலளிப்பதுமாக இருந்து வந்தார். துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரை இடம்பெறச் செய்ய வேண்டும் என ஆளுநர் வலியுறுத்த, பொன்முடி அதனை ஏற்க மறுத்தார். இதனால் தேடுதல் குழுவே நியமனம் செய்யாமல் இழுபறியான நிலை இருந்து வருகிறது. இதற்கிடையே, வழக்கு காரணமாக பதவியை இழந்த பொன்முடி, மீண்டும் அமைச்சராக அனுமதி கொடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்ததும் நடந்தது. இந்நிலையில், ஆளுநருடனான மோதல் போக்கு போன்றவை காரணமாகவே பொன்முடி வனத்துறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்முறையாக அமைச்சராகியுள்ள கோவி.செழியன், ஆளுநருடன் இணக்கமாக செல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்