"இந்த இரண்டும் சேர்ந்தால் நலன்.." - பிரதமர் மோடி பேச்சு

x

ஜனநாயகமும் தொழில்நுட்பமும் இணைந்து மனித குலத்தின் நலனை உறுதிப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது இல்லத்தில் செமி கண்டக்டர் உற்பத்தி துறையில் உள்ள நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், வரும் காலம் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கும் என்றும், டிஜிட்டல் யுகத்தின் அடிப்படையே செமி கண்டக்டர் தான் என்றும் தெரிவித்தார். மேலும், ஜனநாயகமும் தொழில்நுட்பமும் இணைந்து மனிதகுலத்தின் நலனை உறுதிப்படுத்தும் என்றும், செமி கண்டக்டர் துறையில் இந்தியா பொறுப்புடன் முன்னேறி வருகிறது என்றும் பிரதமர் மோடி பேசினார். இதனையடுத்து, தொழில்துறைக்கு பொருத்தமான சூழல் இந்தியாவில் உள்ளது என்றும் அதற்கு பிரதமர் மோடிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்று செமி கண்டக்டர் உற்பத்தி துறை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்