"உலகின்... பிரச்சனைக்கு இதுவே தீர்வு" - மாநாட்டில் அடித்து சொன்ன பிரதமர் மோடி

x

டெல்லியில் வேளாண் பொருளாதார வல்லுநர்களின் 32வது

சர்வதேச மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி

வைத்து உரையாற்றினார். கடந்த 10 ஆண்டுகளில்

பருவநிலையை தாக்குப் பிடித்து வளரும் ஆயிரத்து 900

வகையான புதிய வகை பயிர்களை இந்தியா வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு என்று இலக்கை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இந்தியாவின் சிறு தானிய உணவுகள் உலகத்தின் ஊட்டச்சத்து பிரச்சனைகளை தீர்க்க முடியும் எனக் குறிப்பிட்ட பிரதமர், உலக நாடுகளோடு இந்தியா தனது சிறுதானிய உணவை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்