"மோடி அமைச்சரவையில் 16 பேர் குடும்ப அரசியலில் உள்ளவர்கள்" - ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு
மோடி அமைச்சரவையில் 16 பேர் குடும்ப அரசியலில் உள்ளவர்கள்" - ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு
பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்து திமுக மீது குடும்ப அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியும், அவரின் பேச்சை மக்கள் நிராகரித்து குடும்ப அரசியலுக்கு முழு ஆதரவை அளித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்... விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தா... இவ்விழா அமைச்சர்கள் கே.கே.எஸ். எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் ஆர்.எஸ். பாரதி தலைமையில் நடைபெற்றது. பிரதமர் மோடி அமைச்சரவையில் 16 பேர் குடும்ப அரசியலில் உள்ளவர்கள் என்றும், 50 எம்பிக்கள் வாரிசுகள் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்...