இன்று ஈபிஎஸ் எடுக்க போகும் முடிவு என்ன? - உற்றுநோக்கும் அரசியல் களம்

x

18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் பதவியேற்பு மற்றும் சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது.இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். மக்களவைத் தலைவரான பிரதமர் நரேந்திர மோடியை அவையின் உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்ய தற்காலிக சபாநாயகர் அழைப்பு விடுப்பார். பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் குழு உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 280 எம்.பி.க்கள் இன்று பதவியேற்க உள்ளனர். தொடர்ந்து, நாளை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 264 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.

ஜூன் 27ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்ற உள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 28ஆம் தேதி தொடங்கவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்