சாவர்க்கரின் 5பெருமைகள் பற்றி கூற முடியுமா என கேட்ட மோடி -லிஸ்ட் போட்டு Sarcasm செய்த தமிழக அமைச்சர்
சாவர்க்கர் பற்றி 5 பெருமைகளை INDIA கூட்டணி தலைவர்களால் கூற முடியுமா என்று பிரதமர் மோடி
எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்துள்ளார்.
சாவர்க்கர் , அந்தமான் சிறையில் அடைபட்டபோது நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரிடம் நான் உங்கள் சேவகன் என்று கூறி மன்னிப்பு கடிதம் எழுதி விடுதலை பெற்றவர் என்றும் ஆங்கிலேய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெற்றவர் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சாவர்க்கர் , மத வெறுப்பையும், ஆரிய இனவெறியையும் மக்கள் மத்தியில் பரப்புவதையே கொள்கையாக கொண்டவர் என்றும் அந்தமான் சிறையில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒரே லட்சியத்திற்காக அடைபட்டிருந்தபோது இஸ்லாமியர்களின் தொழுகை நேரத்தில் சங்கநாதம் எழுப்புங்கள் என்று அப்பாவி இந்துக்களை தூண்டிவிட்டு வெறுப்புணர்வை விதைத்தவர் என்றும் அப்பதிவில் அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.
யாரெல்லாம் இந்து மதத்தை சாராதவர்களோ அவர்களெல்லாம் இந்தியர்களும் அல்ல எனவும், இந்தியாவிலேயே பிறந்து, இங்கேயே வாழ்ந்து வரும் மாற்று மதத்தவர்களை பிறர் என்று கூசாமல் சொன்னவர் சாவர்கர் என்றும் காந்தி 'Power to people' என்று சொன்னார். ஆனால் சாவர்க்கர் அதற்கு நேர்மாறாக Power over people' என்று சொன்னார் என்றும் அதாவது மக்களின் மீது அரசு மேலாதிக்கம் செலுத்துவதை ஆதரித்தவர் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.