"பாஜகவுக்கு வெறும் 400 தானா?..700 இடங்கள் கிடைக்கும்.." - கிண்டலடித்த எம்.பி

x

பாஜகவுக்கு வெறும் 400 இடங்களா?... 700 இடங்கள் கிடைக்கும் என்று ஆம் ஆத்மி எம்.பி கேலி செய்துள்ளார்... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து பேசியுள்ள ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், "அகண்ட பாரதத்தின் 700 இடங்களை பாஜக பெறுகிறது" என்றும், "இந்தியாவில் 200 இடங்கள், பாகிஸ்தானில் 100 இடங்கள், ஆப்கானிஸ்தானில் 70 இடங்கள், இலங்கை, பூடான், நேபாளத்தில் தலா 50 இடங்கள், இந்தோனேசியா ஈரானில் தலா 30 இடங்களை பாஜக பெறும் என கிண்டல் தெரிவித்தார். இந்த கருத்துக் கணிப்பு பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது என விமர்சித்த சஞ்சய் சிங், தமிழகத்தில் பாஜக 34 சதவீதத்தைப் பெறப் போகிறது என்பதை யார் நம்புவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் உண்மை ஜூன் 4ம் தேதி வெற்றி பெறும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்