"மோடியின் ரத்த அணுக்களில் முஸ்லிம் வெறுப்பு.." - கொந்தளித்த வைகோ

x

இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி கூறியுள்ள கருத்துக்கு மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்...

ஏப்ரல் 26-ஆம் தேதி நாடு முழுவதும் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பேரணியின் போது, இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துகளுக்கு பெரும் அதிர்வலைகள் கிளம்பியுள்ளது. அதனடிப்படையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மோடி தனது உரையின் மூலமாக மதக்கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிக்க முனைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் நாட்டு மக்களின் செல்வங்கள் அனைத்தையும் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகள் பெற்றெடுத்தவர்களுக்கும் கொடுத்து விடுவார்கள் என மோடி தெரிவித்திருந்தார். நாட்டின் வளங்களை பயன்படுத்துவதில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென மன்மோகன் சிங் கூறியதாகவும், மோடி குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வைகோ, ஆர்.எஸ்.எஸ். தொட்டிலில் வளர்ந்த மோடியின் ரத்த அணுக்களில் முஸ்லிம் வெறுப்பு ஊடுருவியுள்ளது என விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்