காணொளி காட்சி உரையில் பெருமிதம் தெரிவித்த மோடி

x

இரண்டாவது சர்வதேச பசுமை ஹைட்ரஜன் கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். பசுமையான மற்றும் தூய்மையான புவியை உருவாக்குவதில் இந்தியா உறுதி பூண்டு இருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, பசுமை ஹைட்ரஜன் தொடர்பான பாரிஸ் உறுதி மொழியை நிறைவேற்றிய ஜி-20 நாடுகளில், இந்தியா தான் முதல் நாடு என பெருமிதம் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய மின்சக்தி திறன் 3 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். சுத்திகரிப்பு நிலையங்கள், உரம், எஃகு, கனரக போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகள் பசுமை ஹைட்ரஜனால் பயனடையும் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்