``முக்கிய மையம்..'' தமிழகத்தை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி | PM Modi

x

தூத்துக்குடி துறைமுகத்தின் புதிய சர்வதேச கொள்கலன் முனையத்தின் துவக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்றினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழக துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். இங்கு உள்ள மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் 17 சிறிய துறைமுகங்களின் திறன் காரணமாக, கடல்சார் வணிக வலைப்பின்னலின் முக்கிய மையமாக தமிழ்நாடு உள்ளதாக குறிப்பிட்டார். துறைமுக வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்படுவதாகவும், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் திறனையும் தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்