``கிடைத்தது அவமதிப்பு மட்டுமே... பிரதமருக்கு 5 நிமிடங்கள் கூட கிடைக்கவில்லை..''

x

அம்பாலா பிரசாரத்தில், பாஜக அரசாங்கத்தால் மக்களுக்கு கிடைத்தது அவமதிப்பு மட்டுமே என்று பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தார். போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு தடியடியும், கண்ணீர் புகைக் குண்டும் கிடைத்தது. சாலையில் போராடிய மல்யுத்த வீரர்களோடு பேச பிரதமர் மோடிக்கு 5 நிமிடங்கள் கூட கிடைக்கவில்லை என்றார். ஒலிம்பிக்கில் மல்யுத வீரர்களுக்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவார்கள் என்ற பிரியங்கா காந்தி, மக்களுக்கு சுயமரியாதையும், நீதியும் கிடைக்க வேண்டும் என்றால் மக்கள் பாஜக அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என கேட்டு கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்