"உலகத்தின் நண்பன்".. பேச்சால் போலந்து மக்களை கவர்ந்த பிரதமர்

x

மோதல்களை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக போலந்து நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் வார்சாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். தமக்கு உற்சாகமான வரவேற்பு அளித்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், போலந்து நாட்டு மக்கள் குறித்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்படுவதாகவும், 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் போலந்த நாட்டிற்கு வருகை தருவது இதுவே முதன்முறை என தெரிவித்தார். இன்றைய இந்தியா அனைவரது வளர்ச்சி குறித்து பேசுகிறது என குறிப்பிட்ட பிரதமர், மற்றவர்களை பற்றியும் சிந்திப்பதாகவும், உலகத்தின் நண்பனாக இந்தியாவை இன்று உலக நாடுகள் மதிப்பதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்